உக்ரைனுக்கு 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவியை வழங்க ஜெர்மனி தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் நிதி சீர்திருத்தங்களுக்கான திட்டங்களுக்கு சட்டமியற்றுபவர்கள் அனுமதி அளித்ததை அடுத்து, உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்க ஜெர்மனி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த வாரம், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகவும் அச்சந்திப்பில் உக்ரைனுக்கு உதவி வழங்குவது குறித்தும் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன