உக்ரைனுக்கு ராணுவ உதவியை வாரி வழங்கும் பிரித்தானியா!

You are currently viewing உக்ரைனுக்கு ராணுவ உதவியை வாரி வழங்கும் பிரித்தானியா!

உக்ரைனுக்கான 92 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான புதிய ராணுவ உதவியை பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் தற்போது புதிய திருப்பமாக ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இதுவரை தற்காப்பு முறை தாக்குதலை முன்னெடுத்து வந்த உக்ரைன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு பதிலடி தாக்குதலை அறிவித்தது.

இதற்கு மேற்கத்திய நாடுகளின் அதிகப்படியான ராணுவ உதவி மற்றும் மேற்கத்திய ஆயுதங்களின் கையிருப்பு ஆகியவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுடனான உக்ரைனின் இந்த ஆயுத போராட்டத்தில் ஆரம்பம் முதலே பிரித்தானியா மிக சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

மேலும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை, உக்ரைனுக்கு போர் ஆயுதங்கள், ஹெலிகாப்டர் வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை வழங்கி போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று வருகிறது.

இந்நிலையில் 92 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான புதிய ராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது, கூட்டு பயணப் படையில் உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய அரசு வழங்கியுள்ள தகவலில், இந்த ஆயுத உதவி உக்ரைனின் கட்டமைப்புகள், பொதுமக்கள் மற்றும் முன்வரிசையில் உள்ள இராணுவ வீரர்கள் ஆகியோரை பாதுகாக்கும் என்றும், அத்துடன் உக்ரைனின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply