உக்ரைனுக்கு 5,000 கோடி ரூபா மதிப்பிலான இராணுவ உதவிகளை அந்நாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன.
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் தொடர்ந்து கொண்ட இருக்கின்ற நிலையில், ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் இராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனுக்கு 5,000 கோடி ரூபா மதிப்பிலான இராணுவ உதவிகளை பிரிட்டன் தலைமையிலான உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறையின் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.
மொத்தம் வழங்கப்படும் ரூ.5,000 கோடியில் ரூ.3,500 கோடியை பிரிட்டன் வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையை உக்ரைனுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் நார்வே கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.