உக்ரைனுக்கு, அமெரிக்க தயாரிப்பான “F – 16” போர்விமானங்கள் வழங்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என அமெரிக்க அதிபர் பதிலளித்துள்ளார்.
உக்ரைன் விடயத்தில் என்ன விலை கொடுத்தாவது வெற்றியை மட்டுமே பெறவேண்டும் என நேட்டோ வெளிப்படையாக சொல்லிவரும் நிலையில், நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் கனரக ஆயுதங்களையும், கவச வாகனங்களையும் உக்ரைனுக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி, நோர்வே, அமெரிக்கா, சுவீடன், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவசவாகனங்களை வழங்கும் நிலையில், டென்மார்க் தன்னிடமுள்ள அனைத்து ஏவுகணை செலுத்திகளையும் உக்ரைனுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக உக்ரைனுக்கு அமெரிக்க “F – 16” போர்விமானங்களை வழங்கவேண்டுமென்ற முன்மொழிவை நெதர்லாந்து வைத்திருந்த நிலையில், உக்ரைனும் போர்விமானங்களை மேற்குலகம் வழங்கவேண்டுமென்ற கோரிக்கையை விடுத்துள்ளது. இதுவிடயம் தொடர்பில் அமெரிக்க அதிபரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உக்ரைனுக்கு “F – 16” போர்விமானங்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, உக்ரைன் கேட்டுக்கொண்டால், பிரான்ஸ் தனது போர்விமானங்களை உக்ரைனுக்கு வழங்குமென பிரெஞ்சு அதிபர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி: