உக்ரைனை எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்கலாம்: உளவுத்துறை தகவல்!

You are currently viewing உக்ரைனை எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்கலாம்: உளவுத்துறை தகவல்!

உக்ரைன் எல்லையில் எந்த நேரத்திலும் பல தாக்குதல்களை நடத்தவும், கியேவைக் கைப்பற்றவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தாக்க முடிவு செய்தால், உக்ரைனின் தலைநகர் கீவை (Kiev) முக்கிய இலக்காக வைத்து உக்ரைனின் எல்லையில் பல தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகளின் கூறுகின்றனர்.

ரஷ்யப் படைகளைக் கட்டியெழுப்புவதும் ஆயுதங்களையும் பீரங்கிகளை விநியோகிப்பதும் படையெடுப்பைத் தவிர வேறு எதற்காகவும் இருக்க முடியாது என்று மேற்கத்திய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

டாங்கிகள், பீரங்கி, போர் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் எல்லையில் முன்னோக்கி நிலைகளில் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ரஷ்ய கடற்படை கப்பல்கள் கிரிமியா கடற்கரையில் கருங்கடலுக்குள் செல்லத் தொடங்கியுள்ளன.

ரஷ்யாவின் தரைப் போர் ஆற்றலில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர், அதன் விமானப் படையில் பாதி மற்றும் சிறப்புப் படைகளில் கணிசமான பகுதியினர் ஒரு பெரிய படையெடுப்பில் பங்கேற்கும் என்றும், தலைநகர் கீவ் ஆக்கிரமிக்கப்பட்டால் உடனடியாக கிரெம்ளின் ஆதரவு ஆட்சி நிறுவப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செவ்வாயன்று ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் மாஸ்கோவிற்கு விஜயம் செய்தது உட்பட, மோதலைத் தடுப்பதற்கான கடைசி இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானால், புதன்கிழமையன்று தாக்குதல் தொடங்கப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments