உக்ரைன் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா தாக்குதல்!!

You are currently viewing உக்ரைன் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா தாக்குதல்!!

உக்ரைனின் அடர்த்தியான மக்கள்தொகைக் கொண்ட குடியிருப்புப் பகுதியில், ரஷ்யா ஏவுகணைக் கொண்டு தாக்கியதில் 65 பேர் காயமடைந்தனர். 2022ஆம் ஆண்டில் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில், உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அருகில் இந்நகரம் உள்ளது.

இந்நிலையில், சுமி நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 14 பிள்ளைகள் உட்பட 65 பேர் காயமடைந்ததாக, பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுமியின் அடர்த்தியான மக்கள்தொகைக் கொண்ட குடியிருப்புப் பகுதியில் எதிரி ஏவுகணையை ஏவியுள்ளதாகவும், இந்த தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் ஒரு கல்வி வசதியை சேதப்படுத்தியதாகவும் கூறியுள்ளது.

அத்துடன் மருத்துவமனை ஒன்றும் சேதமடைந்ததாகவும் நகரின் தற்காலிக மேயர் ஆர்டெம் கோப்சார் முன்னர் அறிவித்தார்.

பிராந்திய அதிகாரிகள் எரிந்த மற்றும் புகை நிறைந்த உயரமான கட்டிடங்கள், கூடைப்பந்து மைதானத்தில் சிதறிக்கிடக்கும் குப்பைகள் மற்றும் தீயை எதிர்த்து தீயணைப்பு வீரர்கள் போராடும் வீடியோக்களை வெளியிட்டனர்.

முன்னதாக, கடந்த ஆகத்து மாதம் இந்நகரில் உக்ரேனியப் படைகள் ஒரு திடீர் தாக்குதலைத் தொடங்கி, பின்னர் பெருமளவில் பின்னுக்குத் தள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply