உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் உக்ரைனிய பாதுகாப்பு படையினர் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். உக்ரைன் மீதான ரஷ்ய போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைனிய பகுதிகளுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் எப்போது வேண்டும் என்றாலும் அணு ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் ஜனாதிபதி புடின் மிகவும் அமைதியான முறையில் ஏவுகணைகளை உக்ரைனிய எல்லைகளுக்கு அருகில் நகர்த்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்ட ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் உக்ரைனின் பாதுகாப்பு சேவை படை(SBU) அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
மடாலயத்தில் ரஷ்ய சிறப்பு சேவைகளின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக உக்ரைன் பாதுகாப்பு சேவை படையின் (SBU) இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்ட ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து தேவாலயத்தின் தலைவர் பேட்ரியார்ச் கிரில் தெரிவித்த கருத்தில், இந்த சோதனையானது மிரட்டல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் பாதுகாப்பு சேவை படை(SBU) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய உலகின் மையம்”, ரஷ்ய கலாச்சாரம் மற்றும் மதத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கருத்து முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகவே இந்த தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.