உக்ரைன் தளபதியின் உயிரை பறித்த பிறந்தநாள் பரிசு!

You are currently viewing உக்ரைன் தளபதியின் உயிரை பறித்த பிறந்தநாள் பரிசு!

உக்ரைன் தளபதி ஒருவருக்கு பிறந்தநாள் பரிசாக அனுப்பப்பட்ட குண்டு வெடித்ததில், அவர் பரிதாபமாக பலியானார். உக்ரைன் தளபதிகளில் ஒருவரான Hennady Chastyakov (39) என்பவர், அவரது வீட்டில், வெடிகுண்டு விபத்தொன்றில் பலியானார். யாரோ ஒருவர், பொம்மை ஒன்றிற்குள் வெடிகுண்டு ஒன்றை மறைத்துவைத்து Hennadyக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்ததாகவும், அவர் அந்த வெடிகுண்டு வெடித்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவின.

ஆனால், அந்த செய்தி உண்மையில்லை என்று கூறியுள்ள உக்ரைன் உள்துறை அமைச்சரான Ihor Klymenko, என்ன நடந்தது என்பதைக் குறித்து விளக்கமளித்துள்ளார்.

நடந்தது என்னவென்றால், Hennadyக்கு பிறந்தநாள் பரிசாக அவரது நண்பர்கள் பல்வேறு பரிசுகளை வழங்கியுள்ளார்கள். அவற்றை அவர் வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். அந்த பரிசுப்பொருட்களில், அவரது சகா ஒருவர் கொடுத்த கையெறிகுண்டுகளும் இருந்துள்ளன.

அவற்றில் ஒன்றை Hennadyயின் மகன் எடுத்துப் பார்த்துள்ளான். அந்த குண்டிலிருந்த வளையத்தை அவன் திருகிக்கொண்டிருந்ததைக் கண்ட Hennady, அவனிடமிருந்து அதை வாங்கியுள்ளார். அப்போது அந்த வளையத்தை அவர் தவறுதலாக இழுக்க, அந்த குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்ததில் Hennady உயிரிழக்க, அவரது 13 வயது மகனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் உண்மை என்று கூறியுள்ள உக்ரைன் உள்துறை அமைச்சரான Ihor Klymenko, Hennadyயின் மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவுவதை தவிர்ப்பதற்காக தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply