உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதிப் பேச்சுவார்த்தை செயல்படுத்துவது கடினம்!

You are currently viewing உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதிப் பேச்சுவார்த்தை  செயல்படுத்துவது கடினம்!

உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியைச் செயல்படுத்துவது கடினம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷ்யா, முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியது.

மேலும், உக்ரைன் தரப்பு பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது.

அத்துடன் ரஷ்யாவைக் குறிவைத்தும் தாக்க ஆரம்பித்துள்ளது.

இந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து உக்ரைனில் அமைதி திரும்ப ஆபிரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த அமைதி பேச்சுவார்த்தை திட்டம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆபிரிக்க தலைவர்கள், ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்யா ஜனாதிபதி புடின், ஆபிரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி பேச்சுவார்த்தை முயற்சியைச் செயல்படுத்துவது கடினம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply