உக்ரைன் பிரதமருடன் பிரதமர் போரிஸ் திடீர் சந்திப்பு!

You are currently viewing உக்ரைன் பிரதமருடன் பிரதமர் போரிஸ் திடீர் சந்திப்பு!

பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் உக்ரைன் தலைநகர் கீவுக்குத் திடீர் விஜயம் ஒன்றை சனிக்கிழமை மேற்கொண்டார். அதன்போது உக்ரைன் படைகளுக்கு120 இராணுவக் கவச வாகனங்களையும் புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தொகு தியையும் வழங்கியதாக “நம்பர் 10” பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான இராணுவ உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி 24 இல் ரஷ்யா போரைத் தொடக்கிய பிறகு கீவ் நகருக்குச் சென்று அதிபர் ஷெலன்ஸ்கியை நேரில் சந்திக்கின்ற வல்லரசுத் தலைவர் ஜோன்சன் ஆவார். இருவரும் கீவ் நகர வீதிகளில் நடந்து பார்வையிடும் படங்களைச் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அங்கு வைத்து அதிபர் ஷெலன்ஸ்கியை “சிங்கம்” என்று புகழ்ந்தார் ஜோன்சன். உக்ரைன் கணிப்புகளை மீறி, ரஷ்யப் படைகளைக் கீவ் நகரின் வாயில்களில் இருந்து பின்னுக்குத் தள்ளி, 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையை அடைந்துள்ளது. இந்தப் போரில் இங்கி லாந்து அவர்களுடன் உறுதியாக நிற்கி றது என்பதை நான் தெளிவு படுத்தியுள்ளேன். நாங்கள் நீண்ட காலத்திற்கு இவ்வாறு ஐக்கியமாய் இருப்போம்,” என்றும் கூறினார்.

உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் கவச வாகனங்களை ஏற்கனவே விநியோகித் துள்ளன. ஆனால் பிரிட்டன் அதன் நவீன ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதியை (Harpoon anti-ship missile systems) வழங்குகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ நாடு ஒன்று இதுபோன்ற ஆயுத தளபாட உதவியை வழங்குவது இதுவே முதல் முறை ஆகும். அதேசமயம் ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன்(European Commission President Ursula von der Leyen)வெள்ளிக்கிழமை கீவ் நகருக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply