அதில், “Unidentified area phenomena Observations of events” என்ற தலைப்பில், வானியலாளர்கள், தலைநகர் கீவ் மற்றும் அருகிலுள்ள Vinarivka கிராமத்தில் உள்ள இரண்டு விண்கற்கள் கண்காணிப்பு நிலையங்களில் இருந்து யுஎஃப்ஒக்கள் கண்டறியப்பட்டதாகக் கூறினர். இருப்பினும், இந்த பறக்கும் பொருள்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு வேகமானதாக இருந்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன, இது நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாட்டை சுட்டிக்காட்டுகிறது என்று லைவ் சயின்ஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைன் வானியலாளர்களின் கூற்றுப்படி, “நாங்கள் அவற்றை எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். கணிசமான எண்ணிக்கையிலான பொருட்களின் தன்மை தெளிவாக இல்லை என்பதை நாங்கள் கவனிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், “ஒற்றையாகவும், குழு மற்றும் படைப்பிரிவுகலாகவும் விமானங்கள் கண்டறியப்பட்டன, அவை வினாடிக்கு 3 முதல் 15 டிகிரி வேகத்தில் நகர்கின்றன” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த யுஎஃப்ஒக்கள் என்று அழைக்கப்படுபவை இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளன: காஸ்மிக் (cosmic) மற்றும் பான்டம் (phantom). காஸ்மிக் பிரகாசமான பொருளாகத் தோன்றினாலும், பான்டம் அனைத்து ஒளியையும் முழுமையாக உறிஞ்சி, கண்ணுக்குத் தெரியாது.
மேலும் அந்த ஆய்வு வெளியீட்டில், “ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக நீடிக்கும் நிகழ்வுகளை கண்களால் பார்க்க முடியாது” என்று உக்ரேனிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
“சாதாரண புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளும் UFOவை படம் பிடிக்காது. UAPஐக் கண்டறிய, நீங்கள் உபகரணங்களை நன்றாகச் சரிசெய்ய வேண்டும்: ஷட்டர் ஸ்பீட், பிரேம் வீதம் மற்றும் டைனமிக் ரேஞ்சு” என்று குறிப்பிட்டுள்ளனர்.