நேற்றுவரை
சிரித்து நின்றவரே
காற்றாகி
கடலாகி
நெருப்பாகி
மண்ணாகி
இனத்தின்
இருளகற்றிகளாய்
மறத்தோடு
மானம்
காத்தவரே…
அறத்தின்
உச்சமாய்
அணிவகுத்து
அடிமைப்பிடியில்
தாய்மடி விலக
உயிர்வெடி சுமந்தவரே..
உயிர் பிரியும் வரை
உரிமைக்காய்
உறுதியாய் நின்று
எதிரிகளை
எதிர்கொண்டு
விடுதலையின்
வித்தாகி
விதைந்தவரே…
உங்கள்
உறுதி
அடுத்த
சந்ததிகளுக்குள்
ஊற்றெடுக்காவிடின்
மீண்டும்
உறுதியற்ற
தகுதியற்ற
மீட்பர்களாய்
ஆட்கொள்ளும்
அவலம் எமை
ஆட்கொள்ளும்…
ஒரு பக்கத்தில்
உங்களை
வழிபாடு
செய்தவாறு
மறுபக்கத்தில்
உறுதியற்று
அடிவருடி
அழிவைத்
தேடுகின்றோம்..
வானிடை இறங்கி
அழிக்க வரும்
கந்தகக் கழுகுகளும்
கடலிடை எழுந்து
கொல்ல வரும்
குண்டு மழையிலும்
தரைமேலிருந்து
தலைகளை குறிபார்க்கும்
கொடிய நெருப்பு
அனலிலும்
இலக்கு விலகாது
இனத்தின் விடியலே
மறத்தின் முடிவென
மாண்டவரே..
உங்கள்
குணத்தில்
குண்டுசியேனும்
அடிநெஞ்சில்
துளைக்கவேண்டும்
அப்போதுதான்
வளையாத
முதுகுகளாய்
இந்த இனம்
தனக்காக
நிமிர்ந்து
போராட
முற்படும்…
இது
உங்களுக்கான
வழிபாட்டுத்திங்கள்
உங்கள்
வல்மையை
அடிபணியா
நிலையை
குலையா
உறுதியை
கொடுத்து
உதவுங்கள்
மாவீரரே…
-தூயவன்-