உடுப்பிட்டியில் பறந்த தமிழீழத் தேசியக் கொடி ; விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள இனவழிப்பு படைகள்!!

You are currently viewing உடுப்பிட்டியில் பறந்த தமிழீழத் தேசியக் கொடி ; விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள இனவழிப்பு படைகள்!!

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும் , தமிழீழத் தேசியக் கொடி  பறக்க விடப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை  சிங்கள இனவழிப்பு படைகள் முன்னெடுத்துள்ளனர்.

உடுப்பிட்டி பகுதியில் கடந்த 26ஆம் திகதி புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. மறுநாள் 27ஆம் திகதி ஒரு இடத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் சிங்கள பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சிங்கள இனவழிப்பு படைகள் அவ்விடத்திற்கு சென்று அவற்றை அகற்றியதுடன் , அவற்றை சான்று பொருளாக சிறீலங்கா காவற்துறை நிலையம் எடுத்து சென்று இருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள  சிறீலங்கா காவற்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply