உடைந்த கிளாஸிற்கு அர்ச்சுனாவிடமிருந்து தண்டம்!

You are currently viewing உடைந்த கிளாஸிற்கு அர்ச்சுனாவிடமிருந்து தண்டம்!

யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி உடைந்ததால் ஏற்பட்ட சேதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடமிருந்து மீட்க விடுதி உணவக நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே  கண்காணிப்பு காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதால், விசாரணை நோக்கங்களுக்காக கண்காணிப்பு காணொளி காட்சிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தண்ணீர் கிளாஸை கொண்டு அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட 30 வயது நபர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply