உணவகத்தில் பூச்சி மருந்து கலந்த உணவு சாப்பிட்டதால் தந்தையும் மகளும் பலி!

You are currently viewing உணவகத்தில் பூச்சி மருந்து கலந்த உணவு சாப்பிட்டதால் தந்தையும் மகளும் பலி!

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி (20) என்ற தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டிற்கும் கொண்டு சென்றுள்ளார்.

அந்த பார்சலில் ஒன்றை, தனது தம்பி ஆதியிடம் கொடுத்து, எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் வசிக்கும் தாத்தா சண்முகநாதனிடம் கொடுத்து அனுப்பினார்.

மீதமுள்ள பார்சலை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இரவு 8.30 மணியளவில், பகவதியின் தாய் நதியா, சிக்கன் ரைஸ் பார்சலை பிரித்து சாப்பிட ஆரம்பித்த போது, அதில் இருந்து வித்தியாசமான வாசனை வந்ததால், சாப்பிடாமல் வைத்துவிட்டார். உடனடியாக தனது கணவருக்கு போன் செய்து விசாரித்தார்.

அதற்குள், தாத்தா சண்முகநாதன் அந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டு விட்டிருந்தார். சிறிது நேரத்தில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், நதியாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மருத்துவர்கள், இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறினர். இதையடுத்து சிகிச்சை பலனின்றி, தாத்தா சண்முகநாதன் உயிரிழந்தார்.

அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் பார்சலை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பினர். சோதனையில், அந்த ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சிக்கன் ரைஸ் வாங்கப்பட்ட உணவகம் மீது, பகவதி புகார் அளித்தார். அதன்பேரில், உணவகம் சீல் வைக்கப்பட்டது.

நாமக்கல் போலீசார், உணவக உரிமையாளர் ஜீவானந்தம், மகன் பகவதி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட தாய் நதியாவும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply