உண்மைகளை நீண்ட காலம் எவரும் ஆழக் குழி தோண்டிப் புதைக்க முடியாது!
உண்மைகளை மீட்க உண்மை மாந்தர் வரலாற்றில் வந்தே தீருவர்!
வரலாற்றைத் திரிபுபடுத்தித் தனது பேரன் மீது காலம் காலமாக இனவெறியர் திட்டமிட்டுச் சூட்டிய கொடும் பழியை தமிழினமும் இற்றைநாள்வரை காவி வந்த அறியாமையைப் போக்கி ஆதாரங்களை முன்வைத்து வாதாடித் தனது பேரனார் மீது சுமத்தப்பட்ட வரலாற்றுக் கறையை பொசுக்கிப் போக்கியுள்ளார் திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களின் மகன் வழிப் பேரன்!
குமார் பொன்னம்பலம் என்ற இமயமொத்த பண்புடைய ஒரு மாமனிதரின் தந்தை மீது சுமத்தப்பட்ட கொடிய களங்கத்தைப் போக்கி, பொய்களை நம்பித் தூக்கித் திரியும் மந்தைகளாக தமிழர் இருந்து விடாதிருக்க விழிப்பூட்டிய திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கு நன்றியும் பாராட்டுக்களும்!
தமிழினத்திற்காகத் தொடர்ந்து நிலத்திலும், பாராளுமன்றத்திலும், புலத்திலும் வருகை தந்து நீதி வேண்டிக் குரல் கொடுத்துப் போராடிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தன் பேரன் மீது படிந்த சூழ்ச்சிக் கறையயும் போக்கியுள்ளார்!
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரு ஜீ.ஜீ.#பொன்னம்பலத்திற்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்டிருந்த பொய் – வரலாற்றுப் பழி இவரால் இன்று அகன்றது!
திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் “#மலையகத் #தமிழரின் குடியுரிமையை – வாக்குரிமையைப் பறிப்பதற்குத் துணைபோனார்” என்றும், “மலையகத் தமிழரை நாடற்றவர்களாக்கினார்” என்றும் அக்காலத்தில் தமிழர
களைப் பிரித்தாளத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட கொடிய பொய்யை (அரசியல்ச் சதியை) பலரும் இன்றுவரை உண்மையென்று நம்பியிருந்த நிலையில் உண்மையில் மலையகத் தமிழரின் பிரஜாவுரிமையைப் பறிப்பதற்கு #எதிராகவும் “இந்திய – பாகிஸ்தான் பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரகாரம் மலையகத் தமிழருக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்!” என்பதற்கு ஆதரவாகவுமே திரு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் வாக்களித்திருந்தார் என்பது பாராளுமன்றில் ‘ஹன்சாட்’ ஆவண ஆதாரங்களின் மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு எதிராக திரு. ஜி.ஜி பொன்னம்பலம் ‘இல்லை’ என்று வாக்களித்ததாக 20 ஆகஸ்ட் 1948 இன் பாராளுமன்ற பதிவேடான ஹன்சார்ட்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பொய்கள் வேண்டுமானமட்டும் கூத்தாடும்!
#உண்மை ஒரு நாள் வென்றே தீரும்!