உண்மையயை மூடி மறைக்கும் கோத்தாவின் கருத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம்: அழைப்பு விடுக்கும் உறவுகள்!

  • Post author:
You are currently viewing உண்மையயை மூடி மறைக்கும் கோத்தாவின் கருத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம்: அழைப்பு விடுக்கும் உறவுகள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஶ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 30 திகதி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காலை 10 மணிக்கு கண்டனம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியுமே தவிர அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்புத் தெரிவித்தும், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்ததது என சர்வதேசத்திடம் நீதி கோரியும் மேற்கொள்ளப்படும் இவ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மத, சிவில், சமூக மற்றும் கட்சி பிரதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் எவ்வித பேதங்களுமின்றி பங்கெடுத்து போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு அன்புரிமையோடு அழைக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள