ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .
முன்னதாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதேவேளை
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலின் பின்னர் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.