உற்பத்திகளை நிறுத்திவைக்கும் ஐரோப்பிய வாகன உற்பத்தி நிறுவனங்கள்!

You are currently viewing உற்பத்திகளை நிறுத்திவைக்கும் ஐரோப்பிய வாகன உற்பத்தி நிறுவனங்கள்!

“கொரோனா” பரவலின் எதிர்விளைவாக, ஐரோப்பாவின் பிரபல வாகனத்தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்திகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.

பிரான்சின் “Renault” நிறுவனம் முன்னதாக தனது தொழிற்சாலையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதனால், இந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தின்கீழ் இயங்கும் ஏனைய வாகன உற்பத்தி நிறுவனங்களான “Peugeot”, “Citroën”, “DS” மற்றும் “Opel” ஆகிய நிறுவனங்களும் தமது உற்பத்திகளை நிறுத்தி வைத்துள்ளன.

இதேவேளை, ஜெர்மனியின் புகழ்பெற்ற நிறுவனமான “Volkswagon” நிறுவனமும் தனது உற்பத்திகளை நிறுத்தி வைப்பதாக இன்று 17.03.2020 அறிவித்துள்ளது. இதனால், இந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஏனைய வாகன உற்பத்தி நிறுவனங்களான “Skoda”, “Seat”, “Porsche”, “Bentley”, “Bugatti” மற்றும் “Lamborghini” ஆகியவையும், பாரவூர்தி மற்றும் பேரூந்து தயாரிப்பு நிறுவனங்களான “Scania”, “MAN” ஆகிய நிறுவனங்களும் உற்பத்திகளை நிறுத்தி வைத்துள்ளன.

இதேவேளை, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளும் தங்கள் தங்கள் வாகன உற்பத்திகளை நிறுத்துவதற்கு ஆலோசித்து வருவதாகவும், ஜெர்மனியின் “BMW”, “Mercedes-Benz” போன்றவையும் தங்கள் உற்பத்திகளை நிறுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி வகித்து வந்தன. இந்நிலையில், “கொரோனா” பரவலின் எதிர்விளைவால், இந்நிறுவனங்கள் உற்பத்திகளை நிறுத்தி வைப்பதால், ஐரோப்பிய வாகன விற்பனையில் பாரிய சரிவுகள் ஏற்படுமென அஞ்சப்படுகிறது.

மேற்படி நிறுவனங்கள் முதற்கட்டமாக ஐரோப்பாவிலிருக்கும் தமது தொழிற்ச்சாலைகளையே தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதும், ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள இந்நிறுவனங்களின் துணை உற்பத்திச்சாலைகள் அறிவித்தல் வரை தொடர்ந்து இயங்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள