T20 உலகக் கிண்ணப்போட்டிக்கான தகுதிகாண் ஆட்டங்கள் தற்போது மஸ்கற்றிலும் அபுதாபியிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ள அணிகளில் ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து அணிகளில் தமிழ் நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன.
சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் கணேஷன் என்ற 36 வயது வீரர், ஜேர்மன் அணிக்கு தலைமை வகிக்கிறார். 2019 ஆம் ஆண்டு முதல் இவர் ஜேர்மன் அணிக்கு விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, டென்மார்க் அணிக்கு விளையாடும் அந்த அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான சஞ்சீவ் தணிகைதாசன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்டவர். தற்போது 23 வயதான சஞ்சீவ், 2018 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடிவருகிறார்.