முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் நினவுகூரப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொதுச்சுடரினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் ஏற்றினார். இதனையடுத்து தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போதுது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது இம்முறை 17.05.202 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள றுயளைநnhயரளிடயவண திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன்; நினைவுகூரப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பெற்ற இக் கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பெற்றது. தொடர்ந்து பொதுக்குறியீட்டு வணக்கப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில்; வணக்கப்பாடலும் வழங்கப்பெற்றன.
இக் கவனயீர்ப்பு நிகழ்வில் இனஅழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் இளையோர்களால் விநியோகிக்கப்பட்டதுடன், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழிகளிலான பேச்சுக்களும் வழங்கப்பட்டதுடன் காலத்தின் தேவைகருதியதும் சமகால அரசியல் நிலவரங்களையும் உள்ளடக்கியதுமான பேச்சுக்களும் தமிழ்மொழியிலும் இடம்பெற்றிருந்தன.
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிநாட்களில் எமது உறவுகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது பசியாற ஒருநேர உணவுக்கு வழியின்றி உப்பு, பால் இல்லாத கஞ்சி உட்கொண்டு பசியாறியதை நினைவுகூரும் நோக்கில் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பெற்றது. அத்துடன் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Münchenbuchsee தொடரூந்து நிலையத்திலிருந்து இனஉணர்வாளர்களினால் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பினை தெரியப்படுத்தும் நோக்கிலான நடைப்பயணமும் இடம்பெற்று நினைவுத்திடலை வந்தடைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் தமிழின அழிப்பு சார்ந்த, தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கிய சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்; தமது உணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடு நாம் அனைவரும் ஒற்றுமையாக தாயகம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் கையேற்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் ஷவலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்! என்ற உணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது.
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள்
தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் நாள் நெதர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டுள்ளது
டென்மார்க்கில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் சிங்கள பேரினவாத அரசினால் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து, ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளதோடு, கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று வட தமிழீழம் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பல்லாயிரம் மக்கள், மதத் தலைவர்கள் என பலர் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் அழுவதற்காகவல்ல மீண்டும் எழுவதற்காக என்று முள்ளிவாய்க்கால் இன்று தமிழ் மக்களுக்கு சொல்கின்றது
உறவுகளை இழந்தவர்களின் உறவினர்கள் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150,000 வரையான தமிழ் மக்கள் பேரினவாத சிறீலங்கா ஆயுதப் படைகளால் இனவழிப்பு செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஆத்ம சாந்தி பூசை அகில இலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் மதகுருக்களால் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் (கப்பலடியில்) பிதிர்கடன் ஆத்ம சாந்தி பூசை இடம்பெற்றது.
இதன்போது இறுதி போரில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிதிர்கடன் எனப்படும் நீர்த்தார் சடங்கினை கப்பலடி கடற்கரையில் அச்சகர்களால் நடத்தப்பட்டுள்ளது. இதில் மக்கள் கலந்து கொண்டு உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்மா சாந்தி சடங்கினை மேற்கொண்டு முள்ளிவாய்க்கால் கப்பலடி கடலில் கரைக்கும் சம்பிரதாயங்களையும் மேற்கொண்டுள்ளார்கள்.