உலகத்தர வரிசையில் முதலிடம் பிடித்த நோர்வேயின் அதி நவீன உணவகம்! கடலடியில் இருப்பதால் சிறப்பு!!

You are currently viewing உலகத்தர வரிசையில் முதலிடம் பிடித்த நோர்வேயின் அதி நவீன உணவகம்! கடலடியில் இருப்பதால் சிறப்பு!!

2019 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அதி நவீன உணவகங்கள்வரிசையில் நோர்வேயில் கடலடியில் அமைக்கப்பட்ட உணவகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இலண்டனிலிருந்து வெளியாகும், “Wall Paper” என்ற சஞ்சிகை நடாத்திய ஆய்வில் நோர்வேயில்கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன உணவகம் முதலிடம் மெற்றதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் துபாய் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளில் கடலுக்கடியில்அமைக்கப்பட்ட நவீன உணவகங்கள் ஏற்கெனவே இருந்தாலும்ஐரோப்பாவில்  கடலுக்கடியில்அமைக்கப்பட்ட முதல் நவீன உணவகமாக இந்த நோர்வே உணவகம் குறிப்பிடப்படுகிறது.

சுமார் 50 மில்லியன்கள் நோர்வே குரோணர்கள் செலவில் அமைக்கப்பட்ட இவ்வுணவகத்தின் ஒருபகுதிகடல் மட்டத்திலிருந்து 5.5 மீட்டர்கள் ஆழத்திற்கு இறக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 40 பேர் மட்டுமே இருத்து உணவருந்தக்கூடிய கடலடி மண்டபத்தை கொண்டஇவ்வுணவகத்தில் உணவருந்துவதற்காக இதுவரை 7500 வாடிக்கையாளர்கள் இருக்கைகளைமுன்பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புகழ்பெற்ற “Snøhetta” என்ற கட்டுமான பொறியியல் நிறுவனத்தின் வடிவமைப்பில் உருவான இந்தஉணவகம்நோர்வேயின் “Agder” என்ற பிரதேசத்தில், “Lindesnes” என்ற இடத்தில்அமைத்துள்ளதோடு, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள