ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சாதனையை படைத்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் 18 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஈழத்தமிழர் சார்பில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சர்வதேச போட்டியில் பங்குபற்றிய மாணவர்களில் 10 போட்டியாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
அந்தவகையில் 2 தங்கப்பதக்கமும், 6 வெள்ளிப்பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் பெற்றுக்கொண்டனர்.
ஜப்பான் நாட்டில் இருந்தே முடிவுகளை அறிவித்தார்கள், இந்த ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணமே இருக்கிறது.