உலகப்போரின் பின், மிக மோசமான நிலை! ஜேர்மனிய அதிபர் “அங்கேலா மேர்க்கெல்” அம்மையார் கவலை!!

You are currently viewing உலகப்போரின் பின், மிக மோசமான நிலை! ஜேர்மனிய அதிபர் “அங்கேலா மேர்க்கெல்” அம்மையார் கவலை!!

உலகப்போரின் பின்னர், ஜேர்மனி மிக மோசமாய் நிலைக்கு வந்துள்ளதாக, ஜேர்மனிய அதிபர் “அங்கேலா மேர்க்கெல்” அம்மையார் தெரிவித்துள்ளார்.

“கொரோனா” பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜேர்மனியில் இதுவரை, 28 பேர் மரணமடைந்துள்ளதோடு, சுமார் 12.000 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்புக்களின்படி, ஜேர்மனியில், “கொரோனா” தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் உறுதியுடன் பின்பற்றாவிடின், சுமார் 10 மில்லியன் மக்கள் “கொரோனா” தொற்றுக்கு ஆளாகாலமென முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியின் அதிபராக கடந்த 15 வருடங்களாக பொறுப்பிலிருந்துவரும் “அங்கெலா மேர்க்கெல்” அம்மையார், பொருளாதார சரிவுகள், ஏதிலிகள் பிரச்சனை மற்றும் பிரித்தானியாவின் “பிரெக்ஸிட்” நெருக்கடிகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளை இலாவகமாக சமாளித்திருந்தாலும், தற்போதைய “கொரோனா” வைரஸ் தொடர்பான நெருக்கடியானது மிக மோசமானதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள