உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்
தாக்குதலில் இருந்து 5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 516.975 குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2.092.512 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து 9 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியர்கள் தாதிகள் சுகாதார பணியாளர்கள் தியாகங்களைப் போற்றுவோம்.