உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள் அல்லது தனியாட்சி நிலங்களில் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 26.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்துக்கு 735இற்கும் மேற்பட்டோரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.