உலகம் முழுவதும் புகழ் பெற்ற 2 வயது சிறுவனின் ஓவியங்கள்!

You are currently viewing உலகம் முழுவதும் புகழ் பெற்ற 2 வயது சிறுவனின் ஓவியங்கள்!

2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற அந்த சிறுவனின்  ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்யேக ஸ்டூடியோவை ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

அதாவது  சிறுவன் டைனோசர்கள், குதிரைகள் போன்ற விலங்குகளின் ஓவியங்களை அசத்தலாக வரைந்தான்.

சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா மகனின் படைப்புகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தனி பக்கம் உருவாக்கினார்.

சிறுவன் வரைந்த ஓவியங்களை பதிவிட்டார். அவற்றை பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சிறுவனின் ஓவிய திறமையை பாராட்டி பதிவிட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடந்த மிகப்பெரிய கண்காட்சியில் லாரண்டின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பிரபலமான அந்த சிறுவனின் ஓவியங்கள் 7 ஆயிரம் டொலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply