உலகளவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 76 இலட்சத்தை தாண்டியது!

  • Post author:
You are currently viewing உலகளவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 76 இலட்சத்தை தாண்டியது!

நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகின்றது. ஆகவே உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இப்பொழுது 76 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 24 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 இலட்சத்து 37 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 இலட்சத்து 62 ஆயிரம் பேர்வரை இதுவரை குணமாகியுள்ளனர்.

உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 இலட்சத்தையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 16 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற நாடுகளிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பிருத்தானியா (41,279), பிரேசில் (41,058), இத்தாலி (34,167) என Johns Hopkins University தெரிவித்துள்ளது.

பல அமெரிக்க மாநிலங்கள் ஊரடங்கு விதிகளை தளர்த்தியுள்ளன, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் இன்று முதல் ஊரடங்கை தளர்த்துகின்றது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்ததால் பல அமெரிக்க மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்புகளில் உயர்வை கண்டன.

மீண்டும் திறக்கப்பட்ட டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் 2,056 மருத்துவமனைகளில் புதிய கொரோனா பாதிப்புகள் 36 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சீனாவிலும் சிறிதளவு கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. சீனாவில் நேற்றையதினம், அறிகுறியற்ற ஒரு கொரோனா பாதிப்பும் பதிவாகி உள்ளது.

பகிர்ந்துகொள்ள