உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184,353 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்த வைரஸால் 849,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (Worldometers இன் புள்ளிவிபரங்கள்)
கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
சீனாவில் இந்த வைரஸ் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மற்ற நாடுகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்த வைரஸால் 849,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இது வரை 47,681 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவை அடுத்து இத்தாலியல் 25,085 பேரும், ஸ்பெயினில் 21,717 பேரும், பிரான்சில் 21,340 பேரும் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனாவால் அதிக பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளில் ஜெர்மனி உள்ளது.
ஜெர்மனியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,315 ஆகவே உள்ளது.