கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகின்றது. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகின்றது.
கொரோனாவுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், சமூக விலகலை பின்பற்றுவதன் மூலமே கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்று வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பால் 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்துக்கு 58 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.