உலகளவில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது!

  • Post author:
You are currently viewing உலகளவில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  30 லட்சத்தை கடந்துள்ளது!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்க 9 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது . அதேநேரம் இத்தாலியில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கடுமையாக குறையத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில் நேற்று 367 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரு மாதத்தில் இதுவே மிகக்குறைவான உயிரிழப்பு என அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் 2 லட்சத்து 32 ஆயிரமாக பாதிப்பு அதிகரித்துள்ள போதும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இத்தாலியில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் கடுமையாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு 350 க்கும் குறைவானது என்றும், மார்ச் 2வது வாரத்திற்கு பின் ஒரு நாளில் ஏற்படும் குறைவான உயிரிழப்பு இதுவே என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும், இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனியில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேரில், இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள