மொத்தமாக உலகம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், 20 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
- அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 16 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 96 ஆயிரத்தை கடந்துள்ளது.
- ரஷ்யாவில் பாதிப்பு 3 இலட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 3200 ஐ கடந்துள்ளது.
- பிரேசிலில் பாதிப்பு 3 இலட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்மூலம் மோசமாக பாதிக்கப்பட்ட 3வது நாடாக பிரேசில் மாறியுள்ளது. மேலும் உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
- ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 2 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
- பிருத்தானியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 36 ஆயிரத்தை கடந்துள்ளது.