உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டியுள்ளது. நோய் பாதிப்பால் இதுவரை சுமார் 3 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் புதிதாக 22 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.
பிரேசிலில் புதிதாக 16 ஆயிரத்து 200 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்குகிறது.
ரஷ்யாவில் புதிதாக 9 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 3,500 ஐ தாண்டியுள்ளது.
பிருத்தானியாவில் சுமார் 3 ஆயிரம்பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்குகிறது.
மேலும் உலகம் முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.