உலகளாவிய கொரோனாத் தொற்று நிலையில் 69-வது இடத்தில் சிறீலங்கா!

You are currently viewing உலகளாவிய கொரோனாத் தொற்று நிலையில் 69-வது இடத்தில் சிறீலங்கா!

இலங்கையில் கொரோனாத் தொற்று 3வது அலை தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உலகளாவிய தொற்று நிலையில் 69-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (ஜூலை-19) வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களில் மேலும் 23 பேர் உட்பட 1487 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதையடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களது எண்ணிக்கை 284,932 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் உலகாளாவிய கொரோனாத் தொற்று அடிப்படையில் முன்னிலை வகிக்கும் நாடுகள் வரிசையில் 69வது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளது.

288,392 தொற்றாளர்களுடன் கியூபா இலங்கைக்கு முன்னதாக 68வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 கோடியே 50 இலட்சத்து 18 ஆயிரத்து 600 தொற்றார்களுடன் அமெரிக்கா முதலாவது இடத்திலும்,

3 கோடியே 11 இலட்சத்து 74 ஆயிரத்து 322 தொற்றார்களுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும்,

ஒரு கோடியே 93 இலட்சத்து 91 ஆயிரத்து 845 தொற்றார்களுடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply