உலகின் அதிவேக “கொரோனா” பரிசோதனை சாதனத்தை பின்லாந்து / Finland அறிமுகப்படுத்துகிறது.
“கொரோனா” பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைக்கும் நிலையில், “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளும் பல்வேறு பரிசோதனை சாதனங்கள் பாவனையில் இருந்தாலும், தற்போதுள்ள அத்தனை சாதனைகளையும் விடவும் மிகக்குறைவான நேரத்தில், அதாவது 45 வினாடிகளில் பரிசோதனை பெறுபேறுகளை தரக்கூடியதாக இப்புதிய சாதனம் இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள சிறிய குழாய் வழியாக வாய்மூலம் காற்றை ஊதி உட்செலுத்திய 45 வினாடிகளில், குறித்த நபருக்கு “கொரோனா” தொற்றுதல் உள்ளதா, இல்லையா என அறிந்துகொள்ள முடியுமெனவும், குறித்த இச்சாதனத்தை ஐரோப்பிய ஒன்றியம் பாவனைக்கு அங்கீகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.