இன்று தமிழ் பொதுவேட்பாளர் என்ற கூட்டணியில் களமிறங்கிய கட்சிகள் 13ம் திருத்தசட்டத்தை ஆதரிப்பவர்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை இதை தமிழ் பொதுவேட்பாளர் தனது கருத்து வாயிலாக காணொளி ஒன்றில் உறுதிப்படுத்திறுள்ளார்.
ஆனால்
இன்னொரு பக்கத்தால் ஒரு சமூக ஊடக அணியை வைத்து 13ம் திருத்தத்தை ஆதரிக்கும் கட்சிகளை விரட்டுவோம் என தமிழ் பொதுவேட்பாளரின் அணி தனது மடியுக்குள் போலியான கட்சிகளை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முனைவது பேர் ஆபத்தானது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நேர்மையான கொள்கை அரசியல் இவர்களின் பல முகமூடிகளை கிழித்திருக்கிறது.
13 ம் திருத்தத்தை எதிர்த்து கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் போராட்டப் படங்களை வைத்தே கூலிகளால் இன்று மக்களை ஏமாற்றி வாக்கு அரசியல் செய்யும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது.
‘தமிழ் மக்களை கட்சிகளை சிதறடிக்கும் அரசியல் வாதிகளை நிராகரிப்போம்’ என்று மக்கள் முன் பம்மாத்து கோசங்களை முன்வைக்கிறார்கள்.
சொல்லுக்கும் செயலுக்கும் நேர்மை இருக்கவேண்டும்.
அப்படி அவர்களுக்கு இருந்தால்?
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்குபற்றலுடன் 2016- 2019 வரை சுமந்திரன் தலைமையில் தயாரிக்கப்பட்டு இன்றும் தயார்நிலையில் உள்ள ‘ஏக்கியராஜ்ய’ அரசியல் வரைபை நிராகரிக்க அரியநேத்திரனுக்கோ, பொதுக்கட்டமைப்புக்கோ முதுகெலும்பு உள்ளதா?
பொதுக்கட்டமைப்பில் உள்ள பலர் காணாமற்போன ‘தமிழ் மக்கள் பேரவை’யில் அங்கத்தவராயிருந்து, ‘ஏக்கியராஜ்ய’ வரைபை எதிர்த்து தயாரிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவுக்கு ஆதரவாக வடக்கிலும் கிழக்கிலும் ‘எழுக தமிழ்’ செய்தவர்கள்.
அப்படியாயின், ‘ஏக்கியராஜ்ய அரசியல் வரைபை நிராகரிக்கின்றோம்’ என்றும் அந்த வரைபை தயாரிக்க பக்கபலமாக இருந்த தமிழ் அரசியல் தரப்புக்களை நிராகரிக்கிறோம் என்றும் மக்கள் முன் சொல்ல இவர்களுக்கு முதுகெலும்பு உள்ளதா?
தமிழினம் சார் போராட்டங்கள் எதையும் செய்யாமல், முன்னணி செய்த போராட்டப் படங்களையே பிச்சையேற்கும் நிலையில்தான் இவர்களின் தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது.
ஆகவே மக்களே விழிப்பாக இருங்கள் கடந்த 15 வருடங்களாக மக்களை ஏமாற்றி வந்த கூட்டணி வேறு வேறு வடிவங்களில் இன்றும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை இதை உணராத வரைக்கும் எமது அரசியல் குற்றுயிராய் துடிக்கப்போகின்றது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.