உலகிலேயே முதல் முறையாக தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அறுவை சிகிச்சை!

You are currently viewing உலகிலேயே முதல் முறையாக தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அறுவை சிகிச்சை!

அமெரிக்காவில் தாயின் வயிற்றில் இருந்தபோது குழந்தைக்கு உலகிலேயே முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள பேடன் ரோக் நகரைச் சேர்ந்தவர் டெரெக். இவரது மனைவி கென்யட்டா கோல்மன். இவர் கொடிய மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டார்.

இதனால் கர்ப்பமாக கென்யட்டாவின் வயிற்றில் உள்ள குழந்தையும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கென்யட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர் கர்ப்பமாகி 34 வாரங்கள் மற்றும் 2 நாட்களுக்குள் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இதில் ஈடுபட்டது.

பிறக்காத அந்த குழந்தையின் மூளையில் வெட்டப்பட்டு, இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் தமனிக்கு அருகில் சுருளை பொருத்துவதற்கு நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

வெற்றிகரமாக இந்த சிகிச்சை முடிக்கப்பட்ட பின்னர் பேசிய மருத்துவர்கள், ‘இந்த அணுகுமுறை கேலன் குறைபாட்டின் நரம்புகளை நிர்வகிப்பதில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

பிறப்புக்கு முந்தைய குறைபாட்டை நாங்கள் [சரி செய்தோம்] மற்றும் பிறந்த பிறகு அதை மாற்ற முயற்சிப்பதை விட, இதய செயலிழப்பை ஏற்படுவதற்கு முன்பே தலைகீழாக மாற்றினோம். இது இந்த குழந்தைகளிடையே நீண்டகால மூளை பாதிப்பு, இயலாமை அல்லது இறப்பு அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கலாம்’ என தெரிவித்தனர்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த குழந்தை நலம் பிறந்தது. இதுகுறித்து தாய் கென்யட்டா கூறுகையில், ‘அவள் அழுவதை நான் முதல் முறையாகக் கேட்டேன், அந்த நேரத்தில் நான் எப்படி உணர்ந்தேன் என்று என்னால் வார்த்தைகளால் கூற முடியாது. அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, அவள் அழுகையைக் கேட்க முடிந்த மிக அழகான தருணம் அது’ என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments