உலகில் மிக அதிகளவான கொரோனா தொற்று நோயாளர்கள் இந்தியாவில் நேற்று உறுதி செய்யப்பட்டனர்.
இந்தியாவில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 879 கொரோனா மரணங்களும் நேற்று பதிவாகின.
புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 36 இலட்சத்து 89 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்து 879 பேருடன் கொரோனா பலியெடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 71 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நேற்று 97,168 பேர் குணமடைந்தனர். இவா்களுடன் கொரோனா தொற்று நோயில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 22 இலட்சத்து 53 ஆயிரத்து 697 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது கொரோனா தொற்று நோயுடன் இந்தியா முழுவதும் 12 இலட்சத்து 64 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தியாவில் இதுவரை 10 கோடியே 85 இலட்சத்து 33 ஆயிரத்து 85 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.