உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்து அதிகரித்துள்ளது.
இன்று காலை வரையான தரவுகளின் பிரகாரம் ஒட்டுமொத்த தொற்று நோயாளர் தொகை 20 கோடியே 2 இலட்சத்து 37 ஆயிரத்தைக் கடத்து பதிவாகியுள்ளது.
அத்துடன், இன்று காலை வரையான தரவுகளின்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 இலட்சத்து 58 ஆயிரத்தைக் கடந்து அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18 கோடியே 5 இலட்சத்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்களில் 1 கோடியே 54 இலட்சத்து 72 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் 92,000-க்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுளில் உள்ளனர்.
உலகெங்கும் கடந்த ஆறு மாதங்களில் தொற்று நோயாளர்கள் தொகை 10 கோடியில் இருந்து 20 கோடியான அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 10 கோடி தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை வெறும் ஆறே மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளது.
உலகில் ஒட்டுமொத்த தொற்று நோயாளர்களில் 18 வீதமானவர்கள் அமெரிக்காவிலும் 15 வீதமானவர்கள் இந்தியாவிலும் பதிவாகியுள்ளனர்.