அகில உலகமே கண்டு பிடிக்க முடியாத சிறப்பு படையணி தமிழீழ”விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகளில் ஒன்றான கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவுப் படையணி…!
கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு உலக இராணுவத்திற்கு நிகரான விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணி சிறப்பு உபகரணங்களில் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச்சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த படை அணியின் செயற்பாடு.
லெப்.கேணல் கங்கைஅமரனின் பெயரைத் தாங்கியது இவரே கடற்புலிகளின் நீரடிநீச்சற் பிரிவை வழி நடத்தியவர்.

மே.09.2008 அன்று கங்கைஅமரன் நீரடிநீச்சல் பிரிவுஏ-520 துருப்புக்காமி விநியோகக் கப்பல்லை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதலில் ஒன்று, இந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது சிங்களப்படையினரின் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. கடலில் வைத்து முற்றிலும் புதிய முறையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சர்வதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாகியது.
ஏனெனில் கடற்புலிகளின் ஆரம்பகால தாக்குதல்கள் கரும்புலிகள் சார்ந்ததாகவே இருந்தது. அதாவது வெடிமருந்து நிரப்பப்பட்ட படகில் சென்று எதரியின் படகில் மோதி படகைத் தகர்ப்பதே யுக்தியாக இருந்தது.ஆனால் முற்றிலும் புதியமுறையாக நீருக்குஅடியில் சென்று எதிரிக்கு தெரியாதவாறு தாக்குதல் நடத்தப்பட்டது.சிங்களவ அரசை மேலும் குழப்பும் வகையில் இந்தச் சம்பவத்தில் வீரச்சாவடைந்தவர்களை கரும்புலிகளாக அறிவித்தனர்.ஆனால் எந்த வகைத்தாக்குதல் என அறிவிக்கப்படவில்லை.

உலகின் பல நாட்டு இரானுவத்தினர் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட முறையினை கண்டுபிடிக்க முயன்ற சிங்கள இரானுவம்,தாக்குதல் நடத்தப்பட்ட வெகுகாலத்திற்குப் பின்னரே இந்தப் புதிருக்கான விடையை கண்டுபிடித்தது.
