கரூரில் 3 வயது சிறுமி 5 மணி நேரம் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். கரூரை சேர்ந்த கருப்பையா – லதா தம்பதியினரின் மகள் மாதங்கி ஸ்ரீ. இவர் இளம் வயதிலேயே ஸ்கேட்டிங்கில் சிறந்து விளங்கியதால் இதில் உலக சாதனை நிகழ்த்த பெற்றோர்கள் விரும்பினர்.
இதையடுத்து கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு 1 மணி நேரம் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்த முதல் இளம்வயது சிறுமி என்ற உலக சாதனையை படைத்திருந்தார்.
இந்த நிலையில், தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இடைவிடாமல் தொடர்ந்து ஐந்து மணி நேரத்தில் 365 சுற்றுகள், 26.5 கி.மீ தூரத்தை கடந்து, உலக சாதனையை ஏற்படுத்தினார் 3 வயது சிறுமி மாதங்கிஸ்ரீ.
இந்த உலக சாதனையை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் இந்தியா சிஇஓ, அரவிந்த், தேசிய தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தேசிய நடுவர்கள் லாவன்யா, ரஞ்சித் ஆகியோர் சிறுமியின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர்.