கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்ட காரணத்தினால், உலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக அதிபர் டோனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
” நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகின்றோம். கொரோனா வைரஸ் குறித்து சீனாவிடம் இருந்து உலகிற்கு பதில்கள் தேவை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்”
கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றார்.
உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை. உலகசுகாதார அமைப்பு கணிசமான முன்னேற்றங்களை எடுக்காவிட்டால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என டிரம்ப் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.