உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்
உலக நாடுகளிடம் நான் கேட்டுகொள்வதெல்லாம் கொரோனா வைரஸால் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வைரஸின் ஆபத்தை எதிர்த்து நாம் நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆதலால் உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்
கொரோனா வைரஸ் ஆபத்தான எதிரி, ஆபத்தான அம்சங்களின் கலவையுடன் கொரோனா இருக்கிறது. இந்த வைரஸ் மிகவும் திறன்மிக்கது, வேகமாகப் பரவக்கூடியது, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது என கூறினார்.