“உலக நாடுகள் தயாராக இருங்கள்” – ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!

You are currently viewing “உலக நாடுகள் தயாராக இருங்கள்” – ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் போரில் தந்திரமாக அணுஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். மக்களின் உயிருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் எந்தவொரு மதிப்பும் வழங்கவில்லை என்பதால் உக்ரைனில் தந்திரமான அணுஆயுதத்தையோ அல்லது உயிரியல் ஆயுதத்தையோ பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அணுஆயுத தாக்குதல் குறித்து நாங்கள் மட்டும் அல்ல, அனைத்து நாடுகளும் அச்சத்தில் தான் இருக்கிறது, தற்போது இது உண்மையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இது உண்மையாக கூடியது என்பதால் தான் அனைத்து நாடுகளும் கவலை கொண்டு உள்ளது.

உயிரியல் ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தலாம் ஏனென்றால் அவர்கள் செய்யக்கூடியவர்கள் தான், அவர்களுக்கு மனித உயிர் ஒன்றுமே இல்லை. இதுகுறித்து நாங்கள் பயம் கொள்ளவில்லை இருப்பினும் அதற்காக தயாராக இருக்கிறோம், இது உக்ரைனுக்கான கேள்வி மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்குமான கேள்வி என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒருமூலைக்கு பின்தள்ளப்பட்டால் தந்திரமான அணுஆயுதக்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் போரில் தங்கள் நாட்டின் இழப்பு குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, 50 நாள்களாக நடைபெற்று வரும் இந்தத்தாக்குதலில்19,000 முதல் 20,000 ரஷ்ய ராணுவ வீரர்களின் இழப்பை ஒப்பிடுகையில் உக்ரைன் 2500 முதல் 3000 ராணுவ வீரர்களை இழந்து இருக்கிறோம், 10,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள் அவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் போர் கப்பல் மாஸ்க்வா இழப்பு குறித்து பதிலளித்த ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் ஆயுதஇழப்பு என்பது உக்ரைனுக்கு நம்மையே, மேலும் உக்ரைனுக்கு இது நல்ல செய்தியும் கூட என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply