ஊடகப் பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் ஊடகத் தோழமையின் திடீர் இழப்பு பேரதிர்ச்சி!

You are currently viewing ஊடகப் பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் ஊடகத் தோழமையின் திடீர் இழப்பு பேரதிர்ச்சி!

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) இன்று காலை காலமானார்.

சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் கால் பதித்தவர்.

வன்னியில் புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பையும் முடித்து நிதர்சனத்தில் பணி புரிந்துள்ளார்.

வடபோர்முனை பயிற்சி ஆசிரியராக இருந்து இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடரின் சகோதரரும் ஆவார்.

இசைப்பிரியனின் தாயார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் காலமாகி விட்டார்.

நிமிர்வு, சமூகம் ஊடகம், எழுநா உள்ளிட்ட ஊடகங்களிலும் ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஊடகப் பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் ஊடகத் தோழமையின் திடீர் இழப்பு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா இசைப்பிரியன் (வயது 38) இன்று காலை யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply