ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் சிங்களப் படைகள்! காணொளி

You are currently viewing ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் சிங்களப் படைகள்! காணொளி

அகிம்சைவழியிலான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான போராட்டத்தைத் தடுப்பதற்காக, நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்19 தொற்று நோய்யைக் காணரம் காட்டி  சிங்கள பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் மாமாங்கம் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த  ஊடகத்துறையில் பணிபுரியும் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனுக்கு இரண்டாவது தடை உத்தரவு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் கொக்கட்டிச்சோலையில் நிலைகொண்டுள்ள காவல்துறை நிலையதத்தில் இருந்துவருகைதந்த காவல்துறையினர் குறித்த ஊடகவிலாளர்க்கு நீதிமன்ற தடைஉத்தரவை வழங்கினர். இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டார்.

எனினும், நீங்கள்தானே புண்ணிமூர்த்தி சசிகரன் என  விசாரித்துள்ளனர். புலனாய்வுத் தவல்களின் அடிப்படையில் தங்களுடைய பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை வழங்குமாறு மேல் அதிகாரி எமக்கு பணித்துள்ளார் என ஊடகவிலாளரிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சிங்கள பொலிஸார்  கொண்டுவந்த நீதிமன்ற தடைஉத்தரவில் மீனவர் சங்கத்தின் தலைவர் என எனது பெயர் குறிப்பிட்டிருந்தது. எனினும நான் ஒரு ஊடகவிலாளார் தலைவர் அல்ல. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, நான் நீதிமன்ற தடை உத்தரவை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ஊடகவிலாளர் சசிகரன் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என சசிகரன் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.

நாட்டில் நடைபெறும் சம்பவங்களை திரட்டி செய்தியாக மக்களுக்கு வழங்கிவரும் ஊடகவிலாளர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில, இலங்கையில் ஊடகத்துறையைக் அடக்குமுறைக்குள் வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு வழிவகைகளைக் கையாண்டுவருகிறது.

இதேவேளை, நேற்று களுவாஞ்சிக்குடி காவல்துறையினரால் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

பகிர்ந்துகொள்ள