ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு சந்தேக நபர்கள் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!

You are currently viewing ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு சந்தேக நபர்கள் கடும் நிபந்தனையில் பிணையில் விடுதலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீதான வழக்கு விசாரணை 17.11.2020 அன்று மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று சந்தேக நபர்களுக்கும் கடும் நிபந்தனையில் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்ய மன்று உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணி S.தனஞ்சயன் உள்ளிட்ட சட்டவாளர்கள் முன்னிலையாகியுள்ளார்கள்.
வழக்கு விசாரணையின் போது பொலீசார் மற்றும் வனவளத்திணைக்களம் சார்பில் மேலதிக அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான முதன்மை சட்டத்தரணிகள் இந்த வழக்கில் நான்காம்,ஜந்தாம் சந்தேக நபர்களுக்கு அடையாள அணிவகுப்ப தேவைப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த அன்று அவர்கள் அங்கு இருந்ததை உறுதிப்படுத்தி ஏற்றுக்கொண்டிருந்தார்கள் அதன் அடிப்படையிலும் கொவிட் வைரஸ் தொற்று காரணமாகவும் சந்தேக நபர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக இந்தவழக்கு விசாரணையினை மேற்கொள்ளவதற்கு பொலீசாரும் வனவளத்திணைக்களத்தினரும் சரியான விதத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மன்று கட்டளை பிறப்பித்துள்ளதுடன் 
இந்த வழக்கு விசாரணை 02.02.2021 அன்று திகதியிடப்பட்டுள்ளது 

பகிர்ந்துகொள்ள