சிறீலங்கா படையினரின் துணையுடன் ஈ.பி.டி.பி தேசவிரோத ஒட்டுக்குழுவால் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம்-நிமலராஜன் அவர்களின் -23,வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (19.10.2023) வியாழக்கிழமை தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
கடந்த 19.10.2000,ஆம் ஆண்டு ஊடகவியலாளர் மயில்வாகனம்-நிமலராஜன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்களும்,யுவதிகளும் சிறீலங்கா படையினராலும், ஈ.பி.டி.பி தேசவிரோத
ஒட்டுக்குழுவினராலும் வெள்ளை வானில் கடத்தப் பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் சித்திரவதை செய்தும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக – பாரிய உயிர் அச்சுறுத்தல் களுக்குள் நின்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக உண்மையை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தவர் ஊடகவியலாளர் மயில்வாகனம்-நிமலராஜன் ஆவார்.
இவரது படுகொலை சந்திரிக்கா குமாரதுங்க அரசு ஆட்சியில் இடம் பெற்றிருந்தது.
அந்தவகையில் ஊடகவியலாளர் மயில்வாகனம்-நிமலராஜன் அவர்களின் -23,வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் பிற்பகல்-04, மணியளவில் கடைப்பிடிக்கப் பட்டன.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில்…
வவுனியா ஊடக அமையத்தில்…
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் ஆகியவை இணைந்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் நினைவு சதுக்கத்தில்….