ஊரடங்கு உத்தரவு விதிக்க வசதியாக புதிய தற்காலிக சட்டமூலம்!

You are currently viewing ஊரடங்கு உத்தரவு விதிக்க வசதியாக புதிய தற்காலிக சட்டமூலம்!

நோர்வேயில் “கொரோனா” பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கான புதிய தற்காலிக சட்டமூலமொன்றுக்கான ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தற்போது அமுலிலிருக்கும் “கொரோனா” விசேட சட்டவிதிகளின் நீட்சியாக, ஊரடங்கு உத்தரவை விடுப்பதற்கான அதிகாரத்தை வழங்கக்கூடிய விதத்தில் தற்காலிகமான சட்டமூலமொன்றை ஆராய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி யோசனை அங்கீகரிக்கப்படும் பட்ச்சத்தில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த முடியுமெனவும், எனினும், ஊரடங்கு உத்தரவு சட்ட மூலத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ திரும்பப்பெறும் அதிகாரம் நோர்வே நாடாளுமன்றத்துக்கு இருக்குமெனவும் தெரிவித்துள்ள நோர்வே நீதியமைச்சர் “Monica Mæland” அம்மையார், எனினும், மிகக்கடினமானதொரு சூழ்நிலையிலேயே ஊரடங்கு உத்தரவு சட்டமூலம் கையிலெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள