அமெரிக்காவின் 20 மாகாணங்கள் ஊரடங்கை தளர்த்துவதற்கு தயாராகி வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 40 விழுக்காடு மக்கள் தொகையை கொண்ட அந்த மாகணங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பாதுகாப்பாக தளர்த்தப்படும் என்று கூறியுள்ள டிரம்ப் கொரோனா நிவாரண நிதியாக 38 பில்லியன் அமெரிக்க டொலர் அறிவித்துள்ள செனட் சபையை பாராட்டியுள்ளார்.
500 ஊழியர்களுக்கு உட்பட்ட சிறு வணிகத்தை பாதுகாக்கவும், மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காகவும், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.